Published On:Saturday, December 7, 2019
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குளத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு- மக்களுக்கு எச்சரிக்கை

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குளத்தின் மூன்று வான்கதவுகள் மூன்று அடி அளவில் இன்று காலை ஆறு மணியளவில் திறக்கப்பட்டுள்ளன.
தண்ணிமுறிப்பு குளத்தின் நீரேந்து பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும்
கன மழை காரணமாகக் குளத்திற்கு நீர் அதிகளவு வருவதனால் நீர் மட்டம் 21
அடியாக உள்ள நிலையில் மூன்று வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
தண்ணிமுறிப்பு குளமானது 21 அடி வரை நீரைச் சேமிக்கக் கூடியதாக இருப்பினும் அதிகளவு நீர் வந்துகொண்டிருப் பதனால் 21 அடி நீர் மட்டத்தில் மூன்று வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
எனவே தண்ணிமுறிப்பு குளத்தின் வான் நீர் வெளியேறும் பகுதிகளில் வாழ்கின்ற பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் கோரப்பட்டுள்ளனர்.
இருப்பினும் இன்று அதிகளவிலான நீர் வெளியேறியதனால் அப்பகுதியில் விவசாய நடவடிக்கைக்குச் சென்றிருந்த விவசாயிகள் 11பேர் வரமுடியாமல் சிக்கியிருந்த நிலையில் இராணுவம், கடற்படை, பொதுமக்கள் போன்றோரின் ஒத்துழைப்புடன் படகு மூலம் சென்று குறித்த நபர்களை மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.