Published On:Saturday, December 7, 2019
சீரற்ற காலநிலையால் மக்கள் பாதிப்பு– நிவாரணத்திற்காக 35 மில்லியன் ரூபா நிதி

கடந்த சில தினங்களில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
நிவாரணம் வழங்குவதற்காக 35 மில்லியன் ரூபா வழங்கப்பட்டிருப்பதாக இடர்
நிவாரண சேவை மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பத்திராய
தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலையின் காரணமாக நேற்று மாலை வரையில் நாடு முழுவதிலும் 13 ஆயிரத்து 542 குடும்பங்களைச் சேரந்த 46 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலேயே ஆகக் கூடுதலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரம் ஆகும். அனர்த்த நிலையின் காரணமாக சுமார் 750 வீடுகள் சேதமடைந்து இருப்பதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது