Published On:Friday, December 6, 2019
டிஜிட்டல் மயமாகும் ரயில் நிலையங்கள்!

தற்போது நடைமுறையில் வழங்கப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கு பதிலாக புதிய டிஜிட்டல் அட்டை அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இதற்கான அமைச்சரவை அனுமதி பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதாக ரயில் சேவை இராஜாங்க அமைச்சர் சீ.பீ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
முற்கொடுப்பனவு முறையான ரிலோட் செய்துக் கொள்ள கூடிய டிஜிட்டல் அட்டையாகும். தங்களின் பயணங்களை நிறைவு செய்யும் போது தேவைாயன பணத்தை செலுத்த முடியும்.
ரயில்களில் பொருத்தப்பட்டிருக்கும் இயந்திரங்கள் மூலம் இதனை செயற்படுத்த முடியும். இதன்போது பயணத்திற்கான பற்றுச்சீட்டு வழங்கப்படும்.
அதேவேளை டிஜிட்டல் மயத்திற்கு பொருத்தமான வகையில் ரயில் நிலையங்களை புதுப்பிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.