Published On:Monday, March 18, 2019
சற்றுமுன் மீண்டும் பொதுமக்கள்மீது பயங்கரவாத தாக்குதல்!

நெதர்லாந்திலுள்ள உட்ரெச் (Utrecht) நகரத்தில் சற்றுமுன்னர் ட்ரம் (tram) வண்டியில் பயணித்த பொதுமக்கள்மீது பயங்கர துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் குறித்த பகுதியிலுள்ள 24 Oktoberplein junction எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளதாக நெதர்லாந்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிதாரி ஒருவர் பொதுமக்களை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.