Published On:Monday, March 18, 2019
விழுந்து நொருங்கியது விமானம்; சரிந்து விழுந்தது போயிங்!

எத்தியோப்பியன் விமானப் போக்குவரத்து நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 மக்ஸ் 8 விமானம் பாரிய விபத்தினைச் சந்தித்ததன் பிறகு போயிங் நிறுவனம் மிகப்பெரிய சந்தை மதிப்பு வீழ்ச்சியினைக் கண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இந்த பாரிய அனர்த்தத்திற்குப் பிறகு பல நாடுகள் போயிங் ரக விமானங்களை பாவனையிலிருந்து இடை நிறுத்தியமையே இந்த சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது.
எவ்வாறாயினும் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ள இந்த வகை சகல நாட்டு விமானங்களின் மென்பொருள் தரவுகள் 10 நாட்களுக்குள் புதுப்பிக்கப்படும் என்று போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனால் போயிங் 737 மக்ஸ் 8 ரக விமானங்களின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் யாருக்கும் வழங்கப்படாது என்று அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.