இலங்கையில் இருந்து பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்கு தமிழ் மக்களிற்கு குரல் கொடுக்க ஜெனீவா செல்கின்றேன் என கூறி புறப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின்
வலிவடக்கு பிரதேச சபை உறுப்பினர் சஜீவன் சண்முகலிங்கம் வன்னி யுத்தத்தில் தனது கணவன் காணாமலாக்கப்பட்ட பெண் ஒருவரை ஏமாற்றி பல இலட்சங்களை திருடியுள்ளார் என தெரியவருகின்றது..
முள்ளியவளையைச் சேர்ந்த கணவனைத் தேடியலையும் பெண்ணை தான் ஜெனீவாவில் மனித உரிமைகள் மாநாட்டில் கலந்துகொள்ளச்செல்லும் போது தன்னுடன் அழைத்துச்செல்வதாக சுவிட்சர்லாந்தில் வாழும் சகோதரியிடம் சுமார் 25 லட்சங்களை ஏமாற்றியுள்ளான்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கச் செல்கின்றோம் என செல்லும் இவர்கள் செய்யும் மோசடிகள் சிறந்த உதாரணம் ஆகும்.
குறித்த பெண்ணுக்காக 25 லட்சம் பணத்தை வழங்கியிருப்பதும் வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தில் தனது கணவனை இழந்து சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள அகதிச் சகோதரியாகும்.
பணத்தை கொடுத்த பெண் குறித்த வலிவடக்கு பிரதேச சபை உறுப்பினர் சஜீவன் சண்முகலிங்கத்தை தொடர்பு கொண்டு விபரம் கோரியபோது முன்னுக்கு பின் முரனான தகவல்களை வழங்கியுள்ளார்.
அதனடிப்படையில் குறித்த கணவன் காணாமலாக்கப்பட்ட பெண்ணிற்காக தான் 5000 பிராங்குகளை கொடுத்து கடிதத்தை பெற்று வீசாவிற்கு விண்ணப்பித்தபோதும், குறித்த பெண்ணின் பெயர் தடை செய்யப்பட்டுள்ளதால் வீசா கிடைக்காமல் போனதாகவும், தடை பட்டியிலிருந்து பெயரை நீக்குவதற்கு அரசியல் பிரபலங்களால் மாத்திரமே முடியும் என்றும் கூறுகின்றார்.
அதாவது குறித்த வலிவடக்கு பிரதேச சபை உறுப்பினர் சஜுவன் சண்முகலிங்கத்தின் அடுத்த இலக்கு சுவிட்சர்லாந்து தூதரக வீசாவிற்கான தடைப்பட்டியிலிலிருந்து பெயரை நீங்குவதற்காக அப் பெண்ணிடமிருந்து மேலதிக பணத்தினை பெற்றுக் கொள்வதாகும்.
பெறுமதி மிக்க ஜெனிவாவின் நிலை தமிழர்களால் கேள்விக்குள்ளாவது மிகப் பெரும் வேதனை எனக் கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
நிவாரணம் வழங்குவதற்காக 35 மில்லியன் ரூபா வழங்கப்பட்டிருப்பதாக இடர்
நிவாரண சேவை மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பத்திராய
தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலையின் காரணமாக நேற்று மாலை வரையில்
நாடு முழுவதிலும் 13 ஆயிரத்து 542 குடும்பங்களைச் சேரந்த 46 ஆயிரம் பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலேயே ஆகக்
கூடுதலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரம் ஆகும்.
அனர்த்த நிலையின் காரணமாக சுமார் 750 வீடுகள் சேதமடைந்து இருப்பதாகவும்
இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது
பிரித்தானியத் தலைநகர் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து சைகைசெய்து அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை இராணுவத்தின் பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று இலண்டன், வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சுமார் 2400 பவுண்ட் அபராதம் விதிப்பதாக இலண்டன், வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி, இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களை சைகை மூலம் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ எச்சரித்திருந்தார்.
அதன் பின்னர் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றினால் இந்த தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குளத்தின் மூன்று வான்கதவுகள் மூன்று அடி அளவில் இன்று காலை ஆறு மணியளவில் திறக்கப்பட்டுள்ளன.
தண்ணிமுறிப்பு குளத்தின் நீரேந்து பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும்
கன மழை காரணமாகக் குளத்திற்கு நீர் அதிகளவு வருவதனால் நீர் மட்டம் 21
அடியாக உள்ள நிலையில் மூன்று வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
தண்ணிமுறிப்பு குளமானது 21 அடி வரை நீரைச் சேமிக்கக் கூடியதாக
இருப்பினும் அதிகளவு நீர் வந்துகொண்டிருப் பதனால் 21 அடி நீர் மட்டத்தில்
மூன்று வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
எனவே தண்ணிமுறிப்பு குளத்தின் வான் நீர் வெளியேறும் பகுதிகளில்
வாழ்கின்ற பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் கோரப்பட்டுள்ளனர்.
இருப்பினும் இன்று அதிகளவிலான நீர் வெளியேறியதனால் அப்பகுதியில் விவசாய
நடவடிக்கைக்குச் சென்றிருந்த விவசாயிகள் 11பேர் வரமுடியாமல் சிக்கியிருந்த
நிலையில் இராணுவம், கடற்படை, பொதுமக்கள் போன்றோரின் ஒத்துழைப்புடன் படகு
மூலம் சென்று குறித்த நபர்களை மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
[18+]புலம்பெயர்ந்த நாடுகளில் இரவு பகலா குளிரிலும் - பனியிலும் உழைக்கும் ஈழத் தமிழ் பெற்றோருக்கு விளிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடும் தங்களுடைய பெண் பிள்ளைகளையிட்டு அவர்கள் கவனமாக இருக்கவேண்டும் என்பதற்காகவும் மனக்கசப்புடன் இந்த பதிவை இங்கு பகிர்கின்றேன்
லண்டனில் மதுபோதையில் டாக்சி ஒன்றில் ஏறியுள்ள ஒரு இளம் இலங்கை மாணவி பெற்றோர் இலங்கைக்கு அவசர தேவையின் நிமிர்த்தம் சென்று விட்ட நிலையில் பாட்டியுடன் வீட்டில் தனியாக இருந்த அந்த இளம் பெண் வெளியே தனது நண்பர்களுடன் உல்லாசமாக இருந்த பல விடயங்களை தனது நண்பியிடம் தொலைபேசியில் உளறிக்கொட்டினாள் .
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை தமிழ் பெற்றோர்களே உங்களுடைய பிள்ளைகளுக்காக பணம் , வீடு சொத்துக்களை சேர்க்கிறீர்கள் . ஆனால் பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் ஏன் சிந்திப்பதில்லை . விடுமுறை அல்லது அவசர தேவைகளின் நிமிர்த்தம் கணவன் மனைவி இருவரும் சொந்த நாட்டுக்குச் செல்லும் போது வயதான பெற்றோரை நம்பி எப்படி விட்டுச் செல்கிறீர்கள் . இது அவர்களின் தவறல்ல , மாறாக இந்த வயதானவர்களை உங்கள் பிள்ளைகள் ஏமாற்றி விடுகின்றனர் .
பணம் இருக்கு பொருள் இருக்கு என்பதை விட மானம் இருக்கிறது என்பது ஒரு நிமிடம் நீங்கள் சிந்தித்ததுண்டா ?
இலங்கையர்களுடன் சேரவிடுவிதில்லை . பிள்ளைகள் வெளிநாட்டவர்களுடன் தான் சேருகின்றார்கள் என்று தம்பட்டம் அடிக்கிறீர்கள் . ஆனால் அதன் தாக்கம் எங்கு முடிகின்றது என்று ஒரு நிமிடம் சிந்தித்துப்பாருங்கள் .
எனவே இனிவரும் காலங்களிலாவது சிந்தித்து செயல்படுங்கள் . இனத்தைக் காப்பாற்றாமல் விட்டாலும் பரவாயில்லை , உங்களிடம் மண்டியிட்டுக் கேட்கின்றேன் உங்கள் குடும்பம் உங்கள் பிள்ளைகளின் மானத்தைக் காப்பாற்றி வெளிநாட்டில் மனிதனாக வாழுங்கள் .
காசு பணம் என்பவை எல்லாம் மானமும் கௌரவமும் இருந்தால் ஒரு மனிதனுக்கு தானாக வந்து சேரும் . வேதனையுடன் சொல்கின்றேன் முடிந்த வரை நீங்கள் ஒவ்வொரு பெற்றோரும் உங்கள் பிள்ளைகள் மீது விளிப்பாய் இருந்து எதிர்காலத்தை சரிவர செப்பனிடுங்கள் . தாங்க முடியாத வேதனையினாலேயே உரிமையுடன் இதைக் கொட்டித் தீர்க்கின்றேன்.
நித்தியானந்தாவுக்கு தீவு எதையும் விற்கவில்லை என ஈகுவடார் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நித்யானந்தா இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் உள்ள இந்து ஆன்மீக பக்தர்களால் ஆன்மீக குருவாக ஏற்கப்பட்டவர். இவர் பெங்களூர், குஜராத் உள்ளிட்ட பல இடங்களில் மடங்கள் வைத்துள்ளார். மேலும் பாடசாலைகள் பலவும் வைத்துள்ளார்.
நித்யானந்தா மீது சமீப காலமாக பாலியல் வன்முறை, சிறுமிகளை வசியம் செய்து வைத்திருப்பது போன்ற புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து அவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடியதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது தென் அமெரிக்காவின் ஈக்வடாரில் ஒரு புதிய தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த தீவிற்கு அவர் கைலாசம் என பெயர் வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது.
இதற்கென்று தனி வெப்சைட் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்த தீவை தனி நாடு போல் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளார் நித்யானந்தா. அதாவது தனி சின்னம் பதித்த தனி கொடி, தனி பாஸ்போர்ட், தென் அமெரிக்க நாட்டின் சட்ட உதவியுடன் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவித்தன.
இந்த செய்திகள் அனைத்தையும் மறுத்துள்ளது ஈடுவடார் அரசு. இது குறித்து டெல்லியில் உள்ள ஈகுவடார் தூதரகம் சார்பில், நித்தியானந்தாவுக்கு ஈகுவடாரில் அடைக்கலம் ஏதும் தரப்பட்வில்லை.
அதேபோல ஈகுவடார் அருகே தீவும் எதும் விற்கப்படவில்லை. இது தொடர்பாக அவர் சார்பில் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல் அனைத்தும் தவறானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நித்தியானந்தா அகதியாக தன்னை ஏற்று பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டதாகவும் இதனை அரசு மறுத்துவிட்டதாகவும், தற்போது ஈகுவடாரில் இருந்து ஹைதி நாட்டுக்கு நித்தியான்ந்தா தப்பித்துவிட்டதகவும் செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணத்துக்கு விருப்பம் இல்லாத ஆணை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததால், அந்த நபர், தாலிகட்டிய மனைவியை விட்டு ஓடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புனே சக்காம் என்ற பகுதியில் உள்ள ஒரு இளைஞரை விரும்பிய இளம்பெண் பெண் ஒருவருக்கு, அந்த நபரைத் திருமணம் செய்து வைத்தனர்.
அந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத இளைஞர், பெண்ணுக்குத் தாலிகட்டிய பின்னர் ஓடி விட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரபை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்துக்கு விருப்பம் இல்லாத ஆணை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததால், அந்த நபர், தாலிகட்டிய மனைவியை விட்டு ஓடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புனே சக்காம் என்ற பகுதியில் உள்ள ஒரு இளைஞரை விரும்பிய இளம்பெண் பெண் ஒருவருக்கு, அந்த நபரைத் திருமணம் செய்து வைத்தனர்.
அந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத இளைஞர், பெண்ணுக்குத் தாலிகட்டிய பின்னர் ஓடி விட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரபை ஏற்படுத்தியுள்ளது.