Published On:Thursday, December 5, 2019
மகனுக்கு விக்ஷம் கொடுத்துவிட்டு காதலனுடன் தலைமறைவான பெண்!

கொத்மலையில் பெற்ற மகனிற்கு விசம் கொடுத்து விட்டு கள்ளக்காதலனுடன் தலைமறைவான பெண்ணொருவர் பற்றிய அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த பெண்ணும், காதலனும் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
40 வயது பெண்ணும், 30 வயது ஆணுமே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட பெண்ணின் கணவர் வெளிநாட்டில் தொழில் புரிந்து வருகிற நிலையில் அவர்களிற்கு 3 பிள்ளைகள் உள்ளதாகவும், அவர்களில் இரண்டு மகள்கள் திருமணமாகியுள்ள நிலையில், 10 வயதான மகன் தாயாருடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனது கள்ளக்காதலிற்கு மகன் இடையூறாக இருப்பதாக கருதிய தாயார், மகனிற்கு உணவில் விசம் கலந்து கொடுத்து விட்டு தலைமறைவாகிய நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவன் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து தலைமறைவான ஜோடியை பொலிசார் கைது செய்துள்ள நிலையில் அவர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.