Published On:Thursday, December 5, 2019
அராலி கிழக்கில் 5 வயது பாலகன் கிணற்றில் வீழ்ந்து பலி

வட்டுக்கோட்டை அராலி கிழக்குப் பகுதியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 5 வயதான குகதீசன் நிருஜன் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபமாக பலியாகியுள்ளார்.
இந்நிலையில் சிறுவனின் இறப்பு விசாரணையினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்ட நிலையில் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.