எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD
ADD
Published On:Friday, December 6, 2019

கைதான 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நான்கு பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

தெலங்கானா மாநிலம் மெஹபூப்நகர் மாவட்டத்தை சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர், நவம்பர் 27ஆம் தேதி பணி முடிந்து இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, மர்மநபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக முகமது பாஷா, நவீன், சிவா, கேசவலு ஆகிய 4 நான்கு ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், பெண் மருத்துவரை சுங்கச்சாவடி அருகே உள்ள புதரில் தள்ளிவிட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்ட போது, அப்பெண் கூச்சலிட்டுள்ளார். இதனால், அவரது வாயில் மதுவை ஊற்றி மயக்கமுற செய்து பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் எரித்து கொலை செய்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பெண் கால்நடை மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கை விரைவு நீதிமன்றத்துக்கு மாற்ற அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டார். வழக்கை விரைந்து விசாரிக்கும் பொருட்டு சிறப்பு நீதிமன்றம் அமைக்க மெஹபூப்நகர் மாவட்ட நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று குற்றம் எப்படி நடந்தது என்பதை நடித்துக்காட்டச் சொல்லியுள்ளனர். அப்போது இன்று காலை 5 மணியளவில் நான்கு பேரும் போலீஸை தாக்கி தப்பிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அதனால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேரும் பலியாகினர் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் எரித்துக்கொல்லப்பட்ட அதே இடத்தில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149