எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD
ADD
Published On:Wednesday, December 4, 2019

03.12.19 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்கள்..?

மேஷம்
இன்று உங்களுக்கு சுபசெலவுகள் செய்யகூடிய வாய்ப்பு உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணி புரிபவர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலப்பலன் உண்டாகும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் அடைவீர்கள். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.


மிதுனம்
இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். வியாபாரத்தில் நண்பர்களால் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கடகம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். வியாபாரத்தில் அறிமுகம் இல்லாதவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம்.

சிம்மம்
உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகள் வழியில் நல்லது நடக்கும்.

கன்னி
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி அமைதி உண்டாகும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் சாதகமாக இருப்பார்கள். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.



துலாம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் கவனம் தேவை. நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கலாம். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். சுபமுயற்சிகளில் நற்செய்தி கிடைக்கும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோக ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் அனுகூலமாக இருக்கும். எதிலும் கவனம் தேவை.

தனுசு
இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி நன்மை செய்வார்கள். பொன் பொருள் வாங்குவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும்.

மகரம்
இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். குடும்பத்தில் வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும்.

கும்பம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண பேச்சுக்களில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பொன்பொருள் சேரும். நினைத்தது நிறைவேறும்.

மீனம்
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் பொறுமையுடன் செயல்பட்டால் சாதகமான பலனை அடையலாம். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. முடிந்தவரை பயணங்களை தவிர்ப்பது நல்லது.

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149