Published On:Friday, December 6, 2019
மழை வெள்ளத்தால் கிளிநொச்சியில் உயிருக்குப் போராடிய சாரதி

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் அனர்த்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் பெய்து வரும் அடைமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.
இந்நிலையில் கிளிநொச்சி வட்டக்கச்சி இராமநாதபுரம் பகுதியில் பாய்ந்து கொண்டிருந்த வெள்ளத்தில் சிக்குண்ட கார் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
எனினும் அந்தப் பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து அடித்துச் செல்லப்பட்ட காரில் இருந்த சாரதியை காப்பாற்றியுள்ளனர்.
அந்தப் பகுதியிலுள்ள பாலத்தில் சிக்குண்ட காரையும் இளைஞர்கள் நீண்ட போராட்டத்தின் பின்னர் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்