Published On:Wednesday, December 4, 2019
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பம் : கிழக்கு ஊடக அமையத்தின் உதவி.!

மட்டக்களப்பில் பெய்து வரும் மழையின் காரணமாக தனது வீட்டின் கூரையினால் ஒழுக்கு ஏற்பட்டு வீட்டினுள் தண்ணீர் உட்புகுந்ததன் காரணமாக சமைக்கவோ தூங்கவோ முடியாது தனது மூன்று பிள்ளைகளுடன் வசித்து வரும் இந்த தாயாரின் பரிதாபநிலை.
காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக கால்உள்ளால் அழுகியநிலையில் செல்வதால் தொடைப்பகுதியால் கழற்றப்பட்டு செயற்கைக்கால் பொருத்த வேண்டிய நிலையில் அவ்வீட்டில் சிரமத்துடன் வசித்து வருகின்றார்
அவரது கஸ்டநிலை அறிந்த நாம் எம்மால் இயன்ற உதவியினை மனித துயர் துடைப்போம் அமைப்பின் வழிகாட்டலுடன் மேற்கொண்டோம் அவரது வீட்டினுள் மழைநீர் உட்புகாமல் வெளியேற்ற அதனை திருத்தம் செய்து கொடுக்கப்பட்டதுடன் அவருக்கான உலர்உணவுப் பொருட்களும் வழங்கிவைத்தோம்
எமது இந்த தூயபணியில் கரம்கோர்த்த நல்லுள்ளம் படைத்த ஓர்அன்பருக்கு நன்றிகூறுவதுடன் எமது சமூகத்தின் நல்நோக்கம் கருதி எம்மாலான உதவிகளை செய்து மக்கள் பணியினை முன்னெடுப்போம்
இத்தூயபணியில் எம்முடன் அரசியல் நோக்கம் இன்றி சுயஇலாபம் இன்றி மக்கள் பணியாக இணைந்து கொள்ளலாம்.
#கிழக்குஊடகஅமையம் இதுமக்களுக்கான பணியினை முன்னெடுக்கும்.