எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD
ADD
Published On:Friday, November 29, 2019

பிரபாகரனின் புகைப்படம் கொண்ட துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்த இருவர் கைது

மாவீரர் தினத்தை முன்னிட்டு விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய முகப்படம் கொண்ட மலையகமும் எழுச்சியும், எழுச்சி என்பதுமலையகத்திற்கு எட்டா கனியா போன்ற வாசகங்களை கொண்ட துண்டு பிரசுரங்களை பொகவந்தலாவ பகுதியில் விநியோகம் செய்த இரண்டு சந்தேக நபர்களை பொகவந்தலாவ பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

மாவீரர் தினத்தை முன்னிட்டு விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய புகைப்படத்தை கொண்ட துண்டுபிரசுரத்தை பொகவந்தலாவ நகரம் மற்றும் சில தோட்டபகுதிகளில் விநியோகம் செய்து கொண்டிருந்த போதே பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும்,

பிரபாகரனின் புகைப்படம் கொண்ட துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்த இருவர் கைது

குறித்த துண்டுபிரசுரத்தினை கணணி ஊடாக அச்சிட்ட நபரையும் கைது செய்துள்ளதோடு, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொகவந்தலாவ இராணிகாடு தோட்டம் மற்றும் பொகவந்தலாவ டின்சின் நகர தொடர்பாடல் நிலைய உரிமையாளர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது .

சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட சந்தேக நபர்கள் இருவரையும் தீவிர விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு, குறித்த சந்தேக நபர்களையும் ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(அ)

-க.கிஷாந்தன்-

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149