எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD
ADD
Published On:Tuesday, March 19, 2019

திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் நடந்தது என்ன? தயக்கம் காட்டும் பெண்கள்

பொள்ளாச்சி சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் நடந்தவை குறித்து வாக்குமூலம் அளிப்பதற்கு பாதிக்கப்பட்ட மாணவிகள் தயக்கம் காட்டுவதால் சிபிசிஐடி அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பொள்ளாச்சி விவகாரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் எந்த அச்சமுமின்றி புகார் தரலாம் என்று சி.பி.சி.ஐ.டி பொலிசார் அறிவித்தனர். இதற்காக ரகசிய செல்போன் எண்ணும் அறிவிக்கப்பட்டது.

இந்த செல்போன் எண்ணுக்கு கடந்த 4 நாட்களில் மட்டும் அதிகமான பெண்கள் போன் செய்து புகார் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அப்பெண்கள் அனைவரையும் கோவை காவல்நிலையத்துக்கு வந்து வாக்குமூலம் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.



ஆனால், இதுவரை ஒரு பெண்கூட வந்து வாக்குமூலம் அளிக்காத காரணத்தால் பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே பொள்ளாச்சி விவகாரத்தில் புகார் செய்த கல்லூரி மாணவியின் பெயர் மற்றும் எந்த கல்லூரியில் படிக்கிறார் என்ற விவரத்தை முதலில் பொலிசாரும், பின்னர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையிலும் குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால், நாம் சென்று புகார் தந்தாலும் நம்முடைய அடையாளத்தையும் பொலிசார் வெளியிட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149