எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD
ADD
Published On:Tuesday, December 3, 2019

வெள்ளை வேன் சாரதியென தன்னை அறிமுகப்படுத்தியவர், ராஜிதவின் ஊடவியலாளர் மாநாடு தொடர்பில் விசாரணையை ஆரம்பித்த சி.ஐ.டி

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் காலகட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவால் ஏற்பாடுசெய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வெள்ளை வேன் சாரதி என தன்னை அடையாளம் படுத்திக் கொண்டு ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்த நபர் தொடர்பிலும், அந்த ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பிலும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


கிருலப்பனையில் அமைந்துள்ள ஜனநாயக தேசிய அமைப்பு காரியாலயத்தில் கடந்த நவம்பர் மாதம் 10 திகதி முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் தலைமையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற வெள்ளைவேன் கடத்தல் விவகாரத்தின் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டவர் கோத்தாபய ராஜபக்ஷவே என்றும் இவ்வாறு அண்ணளவாக 300 பேர் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்கு உட்படுத்தி கொல்லப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு கடத்தப் பயன்படுத்திய வெள்ளை வேன் ஒன்றின் சாரதியாக பணியாற்றியதாகவும் குறித்த நபர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149