எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD
ADD
Published On:Tuesday, November 26, 2019

வெளிச்சத்திற்கு வந்தது தேர்தல் காலத்தில் வியாழேந்திரன் செய்த திருகுதாளங்கள்

நாட்டில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில்மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவுக்கு ஆதரவாக வியாழேந்திரன் தலைமையில் பத்து கட்சிகள் ஒன்றிணைந்துகளமிறங்கின.

இந்நிலையில் தேர்தலில் கோட்டபாய ராஜபக்சவுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் 38460 வாக்குகள் அளிக்கப்பட்டுஇருந்தன.

குறித்த பத்து கட்சிகளிலும் குறிப்பிடத்தக்க அளவு வாக்குவங்கியைகொண்ட கட்சி, பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மட்டுமே.

கடந்த 2015 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வியாளேந்திரன்வெற்றிபெற வழங்கப்பட்ட வாக்குகளில் பெரும்பாலானவை அவர் போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்புக்குஇடப்பட்டவாக்குகளாகும்.


இந்நிலையில் வியாளேந்திரன் மஹிந்த அணியிடம் கோடிகளுக்கு விலைபோனதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக இருந்த ஆதரவு அவருக்கு இல்லாமல் போனது.

வியாளேந்திரனுக்கு தனிப்பட உருவாகிய வாக்கு வங்கியும் அவரதுஊழல் செயற்பாடுகளால் இல்லாமல் போனதோடு, தற்போது அவரை சுற்றி இருக்கும் கறுப்புக் சட்டைகாரர்களின்சில நூறு வாக்குகள் மாத்திரமே அவரது இருப்பு. ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்சவுக்குமட்டக்களப்பு மாவட்டத்தில் 38460 வாக்குகள் அளிக்கப்பட்டு இருந்தன.

கடந்த 2018 ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் பிள்ளையானின்தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 33276 வாக்குகளை பெற்றிருந்தது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கென நிரந்தர வாக்குவங்கி இருக்கின்ற நிலையில், அக்கட்சி சார்பாக கோட்டபாய அவர்களுக்கு 30000 வாக்குகளேனும்இடப்பட்டிருந்தால் மீதமுள்ள ஒன்பது கட்சிகளும் பெற்றுக் கொடுத்த வாக்குகள் வெறும்8460 மட்டுமேயாகும்.

இவ்வாறு கிடைக்கப்பெற்ற 8460 வாக்குகளில் வியாளேந்திரன், கோட்டபாயவுக்கு பெற்றுக்கொடுத்த வாக்குகள் நிச்சயமாக 460 இற்கும் குறைவானது.

இதேவேளை ஜனாதிபதிதேர்தலுக்கென கோடிக்கணக்கான பணமும் வாகனங்களும் இதர வசதிகளும்வியாளேந்திரனுக்கு வழங்கப்பட்டதாகவும் ,அவற்றை ஏனைய கட்சிகளுக்கு சமமாக பங்கிடாமல்,வியாழேந்திரன் தானே சுருட்டிக் கொண்டதாகவும் பங்களிக் கட்சிகளால் கூறப்படுகிறது.

அத்துடன் வாக்களர்களுக்கு சன்மானங்கள் வழங்கவென கொண்டு வரப்பட்டபொதிகளை கூட அவரது உறவினர்களுக்கும் நெருங்கியநண்பர்களுக்கும் மட்டுமே வியாளேந்திரன் வழங்கியதாகவும், இறுதி நேரத்தில் பணமாகவோ சாராயபோத்தல்களாகவோ வழங்கி, வாக்குகளை கவரவென ஒதுக்கப்பட்ட தொகையையும் வியாளேந்திரன் ஆட்டையைபோட்டதாகவும் பங்காளி கட்சித் தலைவர்கள் புலம்பித் திரிகின்றனர்.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்ச அமோகவெற்றியீட்டியதோடு பல அதிரடி நடவடிக்கைகளையும் மாற்றங்களையும் எடுத்து வருகிறார்.

அத்துடன் ஊழல் செய்வோருக்கு தனது ஆட்சியில் எந்த பதவியும்வழங்கப்படமாட்டாது எனவும் அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் வியாளேந்திரன் தனக்கு , அமைச்சு பதவி ஒன்றினைபெற கொழும்பில் கடும் பிரயாத்தனம் செய்து வருவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் தான் பதவிக்குவந்த சில மாதங்களுக்குள் புலம்பெயர் தமிழர்களை ஏமாற்றியும் வேலை வாய்ப்புக்களை விற்றும்அரச நிதி ஒதுக்கீடுகளில் இடம்பெற்ற வேலைகளுக்கு கொமிசன் வாங்கியும் பினாமிகள் மூலம்மண் பெமிற்றுகளை இயக்கியும் , அரச நிருவாகத்தில் லஞ்சம் , களவு செய்வோருக்கு ஆதரவாகவும்நின்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் ஊழல்காரனாக உருவெடுக்கும் வியாளேந்திரனுக்கு, தான் வெளியிட்டுள்ள கொள்கைகளுக்கு முரணாக அமைச்சுப்பதவி ஒன்றை ஜனாதிபதி வழங்குவாராஎன்ற கேள்வி குறியே! கிழக்கு மாகாணத்துக்கென அமைச்சு பதவி ஒன்று வழங்கப்பட வேண்டுமாகஇருந்தால், தமது வாக்கு வங்கியை ஜனாதிபதிக்கு திருப்பி விட்ட பிள்ளையானின் தமிழ் மக்கள்விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பாக வழங்கப்பட வேண்டுமே அன்றி தங்களிடம் காசுக்குசோரம் போன ஊழல் வியாதி வியாளேந்திரனுக்கு அல்ல என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும்என்பதே தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினதும் அவர்களது ஆதரவாளர்களதும் எதிர்பார்ப்பாகும்என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-பகலவன்-

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149