எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD
ADD
Published On:Monday, November 25, 2019

மலை­யக மக்­களின் உணர்­வு­க­ளோடு எவரும் விளை­யாட வேண்டாம்: அனுஷா சந்­தி­ர­சே­கரன்

''குப்பி லாம்பின் வெளிச்­சத்தில் படித்து பட்டம் பெற்ற பட்­ட­தா­ரி­க­ளையும் குடும்ப கஷ்­டத்­திற்­காக குடும்ப சுமையை தன்­மீது சுமத்­திக்­கொண்டு படித்த மேதை­க­ளையும் கொண்­டது எங்கள் மலை­யக மண். எனவே, எவரும் எமது உணர்­வு­க­ளோடு விளை­யாட வேண்டாம்'' என மலை­யக மக்கள் முன்­ன­ணியின் பிரதி பொதுச்­செ­ய­லாளர் அனுஷா சந்­தி­ர­சே­கரன் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறி­ய­தா­வது,

எம் சமூ­கத்தை விமர்­சிக்க எத்­த­னிப்­ப­வர்­க­ளுக்கு ஒன்று மட்டும் தெளி­வாக கூறிக் கொள்ள விரும்­பு­கிறேன். யாரோ ஒரு­வரின் வாய் வார்த்­தையை பெரி­தாக்கி அதில் அர­சியல் செய்யும் நோக்­கத்­தோடு இதை நான் தெரி­விக்­க­வில்லை.

மலை­யக மக்­களின், உணர்­வு­க­ளோடு, விளை­யாட, அனுஷா சந்­தி­ர­சே­கரன்

மலை­ய­கத்தில் பிறந்த பெண்­ணாக ஒரு சட்­டத்­த­ர­ணி­யாக ஏனைய அனைத்து சமூ­கத்­தையும் மதிக்கும் பிர­ஜை­யாக ஒரு பணிவான வேண்­டு­கோ­ளாக இதனை பகிர்­கிறேன். வேண்­டு­கோளை ஏற்­கா­விட்டால் எச்­ச­ரிக்கையாக இருக்கட்டும்.

நாங்கள் மலை­யக சமூ­க­மாக கல்வி, விளை­யாட்டு, கலா­சார துறை மட்­டு­மன்றி இதர பல துறை­க­ளிலும் பிற சமூ­கத்­தி­ன­ருக்கு நிக­ரா­கவே வளர்ச்­சி­ய­டைந்­துள்ளோம்.

அதே போன்று ஒரு அறையில் குப்பி லாம்பின் வெளிச்­சத்தில் படித்து பட்டம் பெற்ற பட்­ட­தா­ரி­க­ளையும் குடும்ப கஷ்­டத்­திற்­காக குடும்ப சுமையை தன்­மீது சுமத்­திக்­கொண்டு படித்த மேதை­க­ளையும் கொண்­டது எங்கள் மலை­யக மண்.

வீணாக எங்­களின் வளர்ச்­சியை பற்றி தெரி­யாமல் அறி­யாமல் விமர்­சிக்க வேண்டாம். குட்ட குட்ட குனி­ப­வர்கள் அல்ல நாங்கள், இனி­யா­யினும் பொது­வெ­ளியில், சமூக வலைத்­த­ளங்­களில், ஊட­கங்­களில் எம் சமூகம் சார்ந்த வார்த்தை பிர­யோ­கங்­களை கவ­ன­மாக கையா­ளவும், அண்மையில் பேராசிரியர் ஒருவர் மலையக மக்கள் தொடர்பாக கருத்தொன்றை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அனுஷா, ஒரு பேரா­சி­ரியர் என்ற ரீதியில் தங்­களின் மீது கல்­வி­யி­ய­லா­ள­ராக நன்­ம­திப்­புள்­ளது. அதற்­காக நீங்கள் பிற சமூகம் தொடர்­பாக தெரி­விக்கும் கருத்­துக்கள் யாவும் சரி என்­றா­கி­வி­டாது.

உயர்­தரம் வரைக்கும் மட்­டுமே படித்து பட்­ட­தா­ரி­யில்­லாத போதும் கல்­வியின் சமூக வளர்ச்­சிக்­காக பாடு­பட்ட எம் வீர தலைவர் சந்­தி­ர­சே­க­ரனின் புதல்­வி­யா­கவும் அதே மலை­யக மண்ணின் பட்­ட­தா­ரி­யா­கவும் சட்­டத்­த­ர­ணி­யா­கவும் கூறு­கிறேன், எங்கள் உணர்­வு­க­ளோடு விளை­யாட வேண்டாம்.இளை­ஞர்­களே, நண்பர்களே, சகோதர சகோதரிகளே இவரை போன்றவர்களை விமர்சிப்பதில் காலத்தை கடத்தாமல் எமது அடுத்த கட்டத்தை பற்றி சிந்திப்போம்! மலையகம் எமது தாயகம் நாம் ஒரு தேசியம் என்பதை உரத்துச்சொல்லுவோம் எனவும்  என்று தெரிவித்துள்ளார்.

விளம்பரங்கள்

பிரபலமான செய்திகள்

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149