எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD
ADD
Published On:Monday, November 25, 2019

சீண்டிப்பார்க்க நினைத்தால் விளைவுகள் விபரீதம் : அதாவுல்லாவுக்கு எச்சரிக்கை.!

முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவுக்கு ஒன்றை மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகிறோம் எம் இனத்தை சீண்டி பார்க்க நினைத்தால் அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என சிறிடெலோ கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வின்போது பேசியிருந்த சர்ச்சையான முறை தொடர்பில் சிறி டெலோ கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் அந்த அறிக்கையில்,

குறித்த செயற்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்து ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திடமும் அதாவுல்லா மன்னிப்பு கோர வேண்டும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் சமூகம் ஒன்றிணைந்தே வாழ்கிறார்கள்.

இங்கு வடக்கு தமிழன், கிழக்கு தமிழன், மலையகத் தமிழன், கொழும்பு தமிழன், வன்னி தமிழன் என்று பிரிவினைகளை உருவாக்கி தமது சுய அரசியல் இலாபங்களை அடைய முயற்சிக்கும் கீழ்த்தர அரசியல்வாதிகளே உங்களுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுக்கிறோம்.

உங்கள் வக்கிரக அரசியலுக்காக ஒற்றுமையாக வாழும் தமிழ் சமூகத்தை பிளவு படுத்த நினைக்காதீர்கள் உலக வரலாற்றில் தமிழரின் வீரமும் தமிழ் இனத்தின் வரலாற்றையும் கற்றுக்கொள்ளுங்கள்.

ஈழ விடுதலைக்காக தம் உயிரை துச்சமென நினைத்து ஆயுதம் ஏந்தி போராடி தம் உயிர்களை நீத்த பல போராளிகள் நாம் தமிழினம் என்ற ஒன்றை மாத்திரமே மனதில் கொண்டு உயிரை நீத்தார்களே தவிர யாரும் வேற்றுமை பார்த்து போராட்டத்திற்கு வரவில்லை என்பதை மனதில் கொள்ளுங்கள்.

பொறுப்பு வாய்ந்த ஒரு முன்னாள் அமைச்சர் பொதுநிலையில் இவ்வாறான கருத்தை முன்வைத்திருப்பது என்பது அவரது முட்டாள் தனத்தையும் அவரது உள்ளத்தில் தமிழர்கள் பற்றிய மனநிலையையும் தெட்டத்தெளிவாக காட்டுகிறது.

எனவே, தமிழ் மக்களை இவ்வாறு கீழ்த்தரமாக நினைத்திருக்கும் அதாவுல்லா மற்றும் அவர் போன்ற மனநிலையில் உள்ள அனைவரும் இத்துடன் உங்கள் மனதில் இருந்து வக்கிரக எண்ணங்களை மறந்து விடுங்கள் என கேட்டுக்கொள்கிறோம்.

இதேவேளை குறித்த நிகழ்ச்சியில் பயங்கரவாதிகளை அழித்தோம் என்றும் அதாவுல்லா அவர்கள் கருத்து தெரிவித்திருந்தார் அதாவுல்லா அவர்களுக்கு ஒன்றை மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.

இலங்கையில் இடம்பெற்றது உரிமைக்கான விடுதலைப்போராட்டமே தவிர பயங்கரவாதமோ தீவிரவாதமோ இல்லை. அது பயங்கரவாதம் என்றால் ஈஸ்டர் தினத்தன்று மத ஸ்தலங்களில் குண்டு வெடித்து பல உயிர்களை பலியெடுத்தது என்பது புனித போரா? என்ற கேள்வியையும் எழுப்புகிறோம்.

எனவே, தொடர்ந்தும் எம் இனத்தை சீண்டி பார்க்க நினைத்தால் அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என எச்சரிக்கை விடுவதாக அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரங்கள்

பிரபலமான செய்திகள்

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149