சுவிஸ் குடியுரிமையை இன்னும் நீங்கள் எடுக்கவில்லையா.. இதுதான் காரணமா.?

சுவிட்சர்லாந்து குடியுரிமைச் சட்டங்களை எளிதாக்கியும், இன்னும் எதிர்பார்த்த அளவிற்கு மூன்றாம் தலைமுறை அயல்நாட்டவர்கள் குடியுரிமை பெற விண்ணப்பிக்கவில்லை.
மூன்றாம் தலைமுறை அயல்நாட்டவர்கள் குடியுரிமை பெற வசதியாக சுவிட்சர்லாந்து குடியுரிமைச் சட்டங்கள் எளிதாக்கப்பட்டதையடுத்து சுமார் 25,000 மூன்றாம் தலைமுறை அயல்நாட்டவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றுவரையில், குறைந்த சதவிகிதத்தினரே விண்ணப்பித்திருப்பதற்கு ஒரு குறிப்பிட்ட காரணம் கூறப்படுகிறது.
மூன்றாம் தலைமுறையினர் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கும் விதிகளில் ஒன்று, அவர்களது பெற்றோர் ஐந்தாண்டுகள் கட்டாயம் சுவிட்சர்லாந்து பள்ளியில் கல்வி கற்றிருக்க வேண்டும் என்பதாகும்.
இந்த விதி, பல மூன்றாம் தலைமுறை அயல்நாட்டவர்களுக்கு பொருந்துவதில்லை, காரணம், இவர்களின் தாத்தா பாட்டிகளில் பலர், தற்காலிக வேலைக்காக சுவிட்சர்லாந்துக்கு வந்தவர்களாவர்.
அவர்களுக்கு வாழிட உரிமம் கிடைத்ததும் அவர்கள் தங்கள் பிள்ளைகளையும் அழைத்து வந்திருப்பார்கள். அப்படியிருக்கும் நிலையில், அவர்களில் பலர் சுவிட்சர்லாந்தில் ஐந்தாண்டுகள் கல்வி கற்றிருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர்கள் சுவிட்சர்லாந்தில் தொழிற்பயிற்சியை மேற்கொண்டார்கள்.
ஆகவேதான் பெரும்பான்மை மூன்றாம் தலைமுறை அயல்நாட்டவர்களால் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க இயலவில்லை. எனவே புலம்பெயர்தலுக்கான ஃபெடரல் கமிஷன், இந்த விதி சற்று மாற்றப்பட வேண்டும், ஐந்தாண்டுகள் கல்வி கற்றோரின் பிள்ளைகள் என்று இல்லாமல், தொழிற்பயிற்சியை மேற்கொண்டவர்களின் பிள்ளைகள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் வகையில் அவற்றை மாற்ற வேண்டும் என்று அது (FCM) பரிந்துரை செய்துள்ளது