Published On:Wednesday, May 24, 2017
சொந்த மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தை: நேரில் கண்ட தாய்

தமிழகத்தில் பீகாரைச் சேர்ந்த தந்தை ஒருவர் சொந்த மகளையே, இரண்டு வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தி.நகர் சீரணி புரத்தில் பீகாரைச் சேர்ந்த சுரேந்தர் குமார் என்பவர் வசித்து வருகிறார். தனியார் கட்டட காவலாளியாக பணிபுரியும் இவருக்கு 12 வயதில் மகள் உள்ளார்.
இந்நிலையில் இவர் தனது மகளை பாலியல் வன்புணர்வு செய்தபோது, அவரது மனைவி அதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து சுரேந்திர குமாரை பொலிசாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், கடந்த 2 வருடங்களாக அவர் தனது மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதனால் சுரேந்திர குமார் மீது பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.