எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD
ADD
Published On:Wednesday, November 20, 2019

அநுராதபுரத்தில் ஹிஸ்புல்லா துரத்தப்பட்டமைக்கான ஆதாரம் சிக்கியது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள அனுராதபுரம் வருகை தந்த ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாவை பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா திருப்பியனுப்பியது போன்று ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் செயற்படுவார்களாக இருந்தால், தேவையற்ற விதத்தில் தலையிட வருபவர்களை ஒதுக்கி வைக்க முடியுமாக இருக்கும் என தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் உறுப்பினர் கலாநிதி வசந்த பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

உத்தியோகபூர்வ அழைப்புக்கமையவே ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்வில் கலாநிதி ஹிஸ்புல்லா பங்கேற்பு போலி செய்தி தொடர்பில் அவரது எடுபிடி ஊடகப் பிரிவு விளக்கம் கொடுத்திருந்த நிலையில் நேற்றைய கொழும்பு ஊடக சந்திப்பில் கலாநிதி வசந்த பண்டார தெரிவித்து உண்மைகளை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் புதிய நிறைவேற்று ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்க்ஷ நேற்று முன் தினம் பதவியேற்றுள்ளார். அவரின் பதவியேற்பு நிகழ்வு அனுராதபுரத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பெரமுனவின் ஆதரவாளர்கள், கட்சி உறுப்பினர்கள் , மற்றும் மக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த நிலையில் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் .ஹிஸ்புல்லா மற்றும் அவரின் மகனும் பங்கேற்றிருந்தனர். எனினும் நிகழ்வில் அவர்களை எவரும் கண்டுகொள்ளாத நிலையி அநாதராவாக நின்றமையினை அவதானிக்க முடிந்தது.

இதேவேளை முன்னாள் ஆளுநரான ஹிஸ்புல்லா முன்னர் ராஜபக்க்ஷர்களின் மிகுந்த விசுவாசி என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் ஏப்ரல் தாக்குதலின் பின் அவரிற்கான ஆதரவு என்பது பெரும் சரிவை சந்தித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

விளம்பரங்கள்

பிரபலமான செய்திகள்

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149