எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD
ADD
Published On:Wednesday, November 20, 2019

காதலை ஏற்க மறுத்த பெண்ணை சாரமாரியாக குத்திய இளைஞன்.!!

கடலூரில் காதலை மறுத்த இளம்பெண்ணை காதலன் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள வடமூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஷாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

18 வயது நிரம்பிய இவர், அப்பகுதியில் உள்ள ஹாட்சிப்ஸ் உணவகத்தில் பணியாற்றி வந்தார். அதே உணவகத்தில் களமருதூரை சேர்ந்த சக்திவேல் என்ற இளைஞரும் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், சக்திவேல் ஷாலினியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.


சக்திவேல் பலமுறை ஷாலினியிடம் காதாலை தெரிவித்தும் ஷாலினி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சக்திவேல், தான் வைத்திருந்த கத்தியால் ஷாலினியை சரமாரியாக கழுத்து, கை, கால் ஆகிய் இடங்களில் பலமுறை குத்தியுள்ளார். 

இந்நிலையில், ஷாலினியின் அலறல் சத்தம் கேட்டு உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஓடிவர, அதற்குள் சக்திவேல் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார்.

இந்நிலையில், ரத்தவெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த ஷாலினியை அக்கம்பக்கதினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து, சம்பவம் குறித்து அறிந்த பொலிசார், ஷாலினியிடம் புகாரை பெற்றுக்கொண்டு விசாரணை நடத்தி சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது வடமூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரங்கள்

பிரபலமான செய்திகள்

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149