எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD
ADD
Published On:Saturday, November 23, 2019

மெக்சிகோ ரகசியக் கல்லறைகளில் 5,000 பிணங்கள் கண்டுபிடிப்பு.

மெக்சிகோவில் ரகசியக் கல்லறைகளில் கொடூரமாகக் கொன்று புதைக்கப்பட்ட 5,000க்கு மேற்பட்ட பிணங்களை அந்நாட்டு விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்து மீட்டுள்ளனர். மெக்சிகோ நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்குவது குவாதலஹாரா. ஒரு மாதத்துக்கு முன் இங்குள்ள தலாஜோமுல்கோ என்ற புறநகர் பகுதியில் 3,400 சதுர அடி நிலம் விசாரணை வளையத்திற்குள் வந்தது. அந்தப் பகுதியில் நடைபெற்ற சோதனையில் 31 பிணங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

 25 பெண்களின் உடலும் 6 ஆண்களின் உடலும் உள்ளன என ஜாலிஸ்கோ மாகாண அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 10 உடல்கள் யார் என்று அடையாளம் காணப்பட்டுவிட்டன. இவர்களில் 9 பேர் காணாமல் போனதாக அவர்களது உறவினர்கள் புகார் அளித்திருந்தனர் என்றும் தெரிகிறது.

இதுபோல இன்னும் ரகசிய கல்லறைகள் அருகாமையில் இருக்கலாம் என சந்தேகித்த விசாரணை அதிகாரிகள் இரண்டு இடங்களை அடையாளம் கண்டுள்ளனர். மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் மறைமுகமாக இயங்கிவருகின்றன. அவர்களால் மர்மமான முறையில் கொல்லப்பட்டு ரகசியக் கல்லறைகளில் புதைக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்படுகிறார்கள்.

மார்ச் 2017 முதல் இதுபோன்ற கொடூர கொலைகள் அதிகமாகியுள்ளன. ஜாலிஸ்கோ மற்றும் அதன் அண்டை மாகாணமான குவானாஜுவாடோவிலும் உள்ள கடத்தில் கும்பலுக்கு இடையே போட்டி நடப்பதாகவும் அதனால் கொலைகள் அதிகரிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. லைவ் வீடியோவுக்கு ஓகே சொன்னா, ரூம் வாடகை ஜுஜுபிதான் குவாதலஹாராவில் கடந்த மே மாதம் 30 பிணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதற்கு அருகிலேயே செப்டம்பரில் 34 பிணங்கள் கண்டெடுக்கப்பட்டன.

அந்நாட்டு அரசு இந்த மர்மக் கொலைகள் பற்றி விசாரிக்க 3,200 ராணுவத்தினரை நியமித்துள்ளது. 2006 முதல் காணாமல்போனவர்கள் பற்றிய 50 ஆயிரம் வழக்குகள் பதிவாகியுள்ளன. ராணுவமும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. இருப்பினும் 2006ஆம் ஆண்டு முதல் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரகசியக் கல்லறைகளில் 5 ஆயிரத்துக்கு அதிகமான பிணங்கள் கண்டுபிடித்து மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட பல பிணங்கள் அடையாளம் காணப்படவில்லை.

விளம்பரங்கள்

பிரபலமான செய்திகள்

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149