எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய #உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் பிரதேச செய்திகளை லங்காமுரசு இணையத்தில் பிரசுரிக்க Murasulanka@gmail.com என்ன மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
ADD
ADD
Published On:Sunday, March 24, 2019

வவுனியாவில் சொந்த மகளுடன் பாலியல் உறவு கொண்ட பொலிஸ் அதிகாரி

வவுனியா செட்டிக்குளம்  பகுதியில் சொந்த மகளுடன் பாலியல் உறவு கொண்ட தந்தையான பொலிஸாரை செட்டிக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

செட்டிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தந்தையொருவர் (பொலிஸ்) அவரது சொந்த மகளுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாலியல் உறவு கொண்டுள்ளார்.

இதன் பின்னர் இவரது மகளுக்கு  சில வாரங்களுக்கு முன்னர்  திருமணம் செய்து வைத்துள்ளார்.

திருமணமானதன் பின்னர் குறித்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் பாலியல் ரீதியில் இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.


அதன் பின்னர் குறித்த பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் என்னுடன் எனது தந்தை  பாலியல் முயற்சியில் ஈடுபட்டார் என கணவரிடம் தெரிவித்துள்ளார். என மேற்குறிப்பிட்ட சம்பவத்தினை தெரிவித்து செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தில் கடந்த 21ம் திகதி பாதிக்கப்பட்ட பெண்ணால் செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டது.

இதனையடுத்து முறைப்பாட்டின் பிரகாரம் சொந்த மகளுடன் பாலியல் உறவு கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த 21.03..2019 அன்று குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை நேற்றையதினம் (22.03.2019) வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சமயத்தில் ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

விளம்பரங்கள்

பிரபலமான செய்திகள்

Sign Up to lankamurasu Newsletter

© 2012lankamurasu All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149